குல்ஸான்
முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனை அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாளை சந்திக்கிறார்.
கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத்தை தவிசாளர் பதவியிலிருந்து இடை நிறுத்திய மறு நாளே சேகு இஸ்ஸத்தினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இச் சந்திப்பை மேற் கொள்ளும் பொருட்டு சேகு இஸ்ஸதீன் இன்று மாலை கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் அண்மைக் காலமாக ஏற்பட்டுவரும் உட்கட்சி பூசல்களால் கட்சியின் தலைமைத்துவம் உட்பட கட்சியின் போராளிகளும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.
இப் பிரச்சினைகளுக்கு மத்தியில் எதிர்வரும்; 12ம் திகதி பேராளர் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுவதற்கு ஆயத்தமாகி வருகின்ற நிலையில் இது தொடர்பாகவே பேசப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
;
மிக இரகசியமான முறையில் இருவரது சந்திப்பும் இடம் பெற இருந்த நிலையிலே இச் செய்தி கசிந்துள்ளது.