மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மாவட்ட பணிப்பாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது காயமடைந்த மாவட்ட பணிப்பாளர் முதலில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் மட்டக்களப்பு தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். களுதாவளையில் உள்ள தனது வீட்டில் இருக்கும் போதே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.