தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இன்று வறுமையில் வாடுகின்றனர்.
ஓலை குடிசையும், ஊனமுற்ற உடலும் பெரும்பாலும் இவர்களின் பொது அடையாளமாக உள்ளது.
இவர்களுக்கு நிரந்தர வாழ்வாதாரம் என்று ஒன்றே கிடையாது.
இவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பேசி பேசியே தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற கதிரைகளை கைப்பற்றுகின்றது.
ஆனால் இப்போராளிகளின் வாழ்வாதாரத்துக்கு, மீட்சிக்கு எவ்வித உதவியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்குவதாக இல்லை.
மாறாக புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களிடம் இருந்து போராளிகளின் மறுவாழ்வுக்கென சொல்லி பல இலட்சம் ரூபாயை சுரண்டி கையகப்படுத்தி கொள்கின்றது.
ஆனால் போர் காலத்தில் புலிகள் இயக்க போராளிகளை எதிரிகளாக பார்த்த இராணுவத்தினர் போரற்ற தற்போதைய சூழலில் மனிதாபிமானத்துடன் நடக்கின்றனர்.
மல்லாகம், மிருசுவில் ஆகிய இடங்களில் வாழ்கின்ற முன்னாள் பெண் புலிகள் இருவரின் இல்லத்துக்கு யாழ். கட்டளை தலைமையகத்தை சேர்ந்த பெண் இராணுவத்தினர் நல்லெண்ண அடிப்படையில் நேரில் சென்று பார்த்து உதவிகள் வழங்கினர்.
அத்துடன் இவர்களில் ஒருவரின் பிறந்த தின விழாவில் கேக் உண்டு மகிழவும் செய்தனர்.