News Update :

Friday, February 24, 2017

TamilLetter

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் கிழக்கிலிருந்து வடக்கிற்கான மூன்று நாள் சுற்றுப்பயணம்

T.K.Rahumathulla 


அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் கிழக்கிலிருந்து வடக்கிற்கான மூன்று நாள் சுற்றுப்பயணம் நாயிற்றுக்கிழமை(26) காலை ஆரம்பமாகவுள்ளது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா இஸ்ஸடீன் தலைமையில் 25 ஊடகவியலாளர்கள் இச்சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

 இச்சுற்றுப் பயணம் திருகோணமலை மற்றும் புல்மோட்டை ஊடாகச் சென்று முல்லைத்தீவு வழியாக யாழ்ப்பாணம் சென்றடையவுள்ளது.

 யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்பு மிக்க  முக்கிய  இடங்களை பார்வையிடவுள்ளதுடன் வடமாகாண சபை முதல்வர்  மற்றும் ஆளுனர் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேசவுள்ளனர்.

மேலும்; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதுடன் அங்குள்ள ஊடகத் துறைசார்ந்த நிறுவனங்களையும் சென்று பார்வையிடவுள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-