News Update :

Friday, February 17, 2017

TamilLetter

ஓடும் காரில் நடிகை பாவனா மானப்பங்கம்: கேரளாவில் பரபரப்பு



தீபாவளி, ஜெயம் கொண்டான், கூடல் நகர், ஆர்யா, வெயில் போன்ற தமிழ்த்திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை பாவனாவின் காருக்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் கேரள காவல்துறையினர், அவரது கார் ஓட்டுனரைக் கைது செய்துள்ளனர். 
முன்னதாக, கேரளா எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியில் நள்ளிரவுக்குப் பின் நடிகை பாவனா  காரில்  சென்றுக்கொண்டிருந்த போது, வழிமறித்த மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரது காருக்குள் புகுந்துள்ளனர். பாலாரிவட்டம் எனும் இடத்திற்குச் செல்லும் வரையில், அவரைக் காருக்குள் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளனர்.  
இச்சம்பவம் தொடர்பில், நடிகை பாவனாவின் கார் ஓட்டுனரான மார்ட்டின் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். 
தம்மைப் பலவந்தப்படுத்தியவர்களில் ஒருவர் ஏற்கெனவே தம்மிடம் ஓட்டுனராகப் பணிப்புரிந்தவர் என்றும் பாவனா போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். 
நடிகை பாவனாவை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்கள் அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்ததாகவும், அவர் வாக்குமூலத்தில்  தெரிவித்துள்ளார். இச்சம்பவம்  திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-