https://youtu.be/abqTf0DFpBo -(வீடியோ இணைப்பு)
;
மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஏ.அப்துல் லெத்திப் அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக சிறந்த முறையில் மக்கள் பணியாற்றி வருகின்றார்.அவர் தமது கடமையை நியாயமாகவும் நேர்மையாகவும் செய்து வருவதோடு; மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைக்காத பிரதேச செயலக ஊழியர்மீதும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு சொந்தமான காணிகளை சில தனிநபர்கள் சூறையாடி வருவதற்கு எதிராக பெரும் அதிர்ப்தி தெரிவித்துள்ளார்.
இப்படியான நில சுரண்டல்களை செய்து வரும் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக தராதரம் பார்க்காமல் சட்ட நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றார்.
இப்படியான நடவடிக்கையில் பிரதேச செயலாளர் மிக தீவிரம் காட்டி வருவதனால் காணியை சுவிகரித்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் ஆதரவாளர்கள் பெரும் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.
ஏமாற்றம் அடைந்த காணிக் கொள்ளையர்கள் பிரதேச செயலாளருக்கு எதிராக சில கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் சிலரை துண்டிவிட்டு அவரின் கடமையை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஒருங்கணைப்புக் குழுக் கூட்டத்தை பகிஷ்கரிப்பில் ஈடுபடுமாறு பிரதேச செயலாளரே கூறியதாக ஓரு புரளியை ஒரு கிராம சேவை உத்தியோகத்தரே கிளப்பி விட்டிருந்தார்.அத்தோடு அந்த விடயம் தொடர்பாக தனது நாட்குறிப்பேட்டிலும்; பதிவு செய்திருந்தார். பிரதேச செயலாளரின் திறமையினால் அந்த நாற்குறிப்பேடு ஆதரமாக அவரின் கையில் சிக்கியது.
ஆதாரங்கள் சிக்கியதால் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை கிராம சேவை உத்தியோகத்தரை காப்பற்றுவதற்கு முயற்சி செய்தார்.அத்தோடு நிலத்தை அபகரித்த நபர்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்.
முன்னாள் மாகாண அமைச்சர் பல முரண்பாடான கருத்துக்களை மாற்றி மாற்றி பேசியதால் மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் உதுமாலெப்பையை பார்த்து பச்ச பொய் சொல்கிறார் என்றனர். (வீடியோ
அக்கரைப்பற்றில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நில ஆக்கிரமிபை தடுப்பது யார்?