News Update :

Monday, February 27, 2017

TamilLetter

,இன்று தவம் உதுமாலெப்பை மோதல்

;


அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசீம் இணைத் தலைமையில் பிரதேச கேட்போர் கூடத்தில் கூடியது.
2017;ம் ஆண்டில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் செயற்படுத்தப்படும் திட்டம் தொடர்பாக ஆராயப்பட்டு இதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

மகளிர் அபிவிருத்தி திணைக்களத்திற்கு நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கான காணியை வழங்குமாறு அத் திணைக்களத்தினால் கோரிக்கை விடப்பட்டிருந்தது.இக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு பிரதேச செயலகத்திற்கு பின்புறமாக காணப்படும் காணியை வழங்குவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்ட போது அக் காணியில் ஒரு தனிநபர் யாருக்கும் தெரியாமல் மூன்று நாட்களுக்குள் வீடு ஒன்றை கட்டியுள்ளதாகவும்,கிராம சேவை உத்தியோகத்தர் இதற்கெதிராக பிரதேச செயலாளரிடம் முறையிட்டதாகவும் பிரதேச செயலாளர் உடனடியாக அக் கட்டிடத்தின் பணிகளை இடைநிறுத்துமாறு பணித்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் சபையில் தெரிவித்தார்.

இதில் குறிக்கிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மாநகர ஆணையாளரை நோக்கி மாநகர சபை இதற்கு அனுமதி வழங்கியதா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மாநகர ஆணையாளர் தங்களிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அனுமதி பெறாமலும் அரசாங்க நிலத்தை தனிநபர் சூறையாடியுள்ள படியினால் உடனடியாக இக்கட்டிடத்தை அகற்றுமாறு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பைஸல் காசீம் பிரதேச செயலாளரை பணித்தார்.

இக் கட்டிடத்தை அகற்ற முடியாது எனவும் முன்னாள் அமைச்சரின் உறவுக்காரர் என்பதனால் சம்மந்தப்பட்டவரோடு கலந்துரையாடலில் ஈடுபட வேண்டுமெனவும் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை சபையில் தெரிவித்தார்.

பிரதேச செயலாளர்,  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மற்றும், மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர் உதுமாலெப்பையின் கூற்றுக்கெதிராக கண்டனங்களை தெரிவித்தனர்.

அத்தோடு  ஒரு தனிநபரின் சுயநலத்திற்காக அதுவும் அவரின் கட்சியின் தலைவரின் உறவுக்காரர் என்பதற்காக அக்கரைப்பற்றின் வளங்களை சுரண்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் உதுமாலெப்பை அக்கரைப்பற்றின்; வளங்களை கொள்ளையிடுவதற்கு துணைபோகின்றார் என குற்றம் சாட்டப்பட்டது ;

இதன் போது பல்வேறு குற்றச்சாட்டுக்களை இரண்டு தரப்பினரும் சபையில் முன்வைத்து ஆக்ரோசப்பட்டனர் இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

பலத்த வாதப் ;பிரதிவாதங்களிற்குப் பிறகு அரச காணிகளை முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்த நபர்களிமிருந்து உரிய காணிகளை மீட்பதற்கு பிரதேச செயலாளருக்கு சபை அனுமதி வழங்கப்பட்டது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-