வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் வட கொரிய ஜனாதிபதி அவ்வப்போது பரிசோதித்து வரும் நிலையில் அவரது சகோதரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.