கூவத்துார் சொகுசு விடுதியில் இருந்து, மாறு வேடத்தில் தப்பி வந்தேன்,” என, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் தெரிவித்தார்.
சசிகலா தரப்பினர், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களை, கூவத்துார் அருகே சொகுசு விடுதியில், அடைத்து வைத்துள்ளனர். அங்கிருந்து, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் தப்பி, நேற்று முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்து, அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
பின், அவர் கூறியதாவது:
பின், அவர் கூறியதாவது:
என்னை கூவத்துாரில் அடைத்து வைத்திருந்தனர். அங்கு அவமானப்படுத்தப்பட்டோம். அங்கிருந்து, மாறு வேடத்தில் தப்பி வந்தேன்.பலத்த பாதுகாப்பு இருந்ததால், சந்தர்ப்பம் கிடைக்கும் வரை காத்திருந்தேன். சசிகலா வருவதற்குள் வந்து விட வேண்டும்; அங்கிருந்தால் மாட்டிக் கொள்வோம் என நினைத்து, ஒரு திட்டம் போட்டேன். நான் சிவில் இன்ஜினியர் என்பதால், பிளான் போட்டு வந்தேன்.
அங்குள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு, உடல் அளவில், மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் அடைக்கப்பட்டிருந்த ஆறு நாட்கள், மாலை, 3:00 மணியில் இருந்து, இரவு, 1:00 மணி வரை, ‘போன், பேஸ்புக்’கில், பொது மக்கள் கூறிய கருத்துக்களுக்கு பதில் கூறுவேன்.
‘வாட்ஸ் ஆப்’பில், ‘எப்போது, முதல்வருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள்’ என கேள்வி கேட்டு வரும் தகவலுக்கு, ‘வெயிட்’ என்று பதில் போடுவேன். ஏனெனில், வெளியில் வந்து தான், ஆதரவு தெரிவிக்க முடியும். நான் மட்டும் வரவில்லை; எல்லாரும் வரப்போகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.