தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெ., சமாதியில் அளித்த பேட்டியில், ஜெயலலிதா மரணத்திலிருந்து இன்று வரை சசிகலா செய்த சம்பவங்கள் குறித்து வெட்டவெளிச்சமாக போட்டுடைத்தார் பன்னர்செல்வம்.
இதனால், அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து அவரை சசிகலா நீக்கினார். விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, காலை 11 மணிக்கு பத்திரிகையாளரை சந்தித்த பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பதால் தீபாவுக்கு மதிப்பளிக்கிறேன் எனவும், அவர் கட்சிப்பணியாற்ற என்னுடன் வந்தால் ஏற்றுக்கொள்வேன் என அழைப்பும் விடுத்திருந்தார்.
இந்த சூழலில், தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தற்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு விரைந்துள்ளார். அங்கு இருவரும் சந்தித்துப் பேசுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சந்திப்புக்குப்பிறகு, இருவரும் ஒன்றாக பேட்டியளிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால், தமிழக அரசியல் வட்டாரத்திலும், அதிமுகவினரிடையேயும் மேலும் பரபரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.