News Update :

Friday, February 3, 2017

TamilLetter

சிறிலங்காவில் அமைச்சரவை மாற்றம்


சிறிலங்கா அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றம் ஒன்று தேவைப்படுவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணங்கியுள்ளனர்.
ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர் தலதா அத்துகோரள இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அமைச்சரவை மாற்றத்துக்கு இதுவே சரியான தருணம் என்றும், இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, சில அமைச்சர்களின் அமைச்சுப் பொறுப்புகள் மாற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை மாற்றம் தவறானது அல்ல என்றும், எந்த அமைச்சரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரான அமைச்சர் மகிந்த அமரவீரவும், அமைச்சரவை மாற்றம் ஒன்றுக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வரும் சிங்கள- தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றத்துக்கு சாத்தியங்கள் இருப்பதாக கொழும்பில் அவர் நேற்று தெரிவித்தார்.
எனினும், அமைச்சரவை மாற்றம் தொடர்பான இறுதியான முடிவு ஏதும் இன்னமும் சிறிலங்கா அதிபரால் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-