குற்றம் புரியும் அதிபர்கள் தொடர்பில், அருகில் உள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக தெரியப்படுத்தலாம் என மாகாண கல்வியமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் போது இலஞ்சம் பெற்ற அதிபர்களை சேவையில் இருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வியமைச்சர் ரஞ்சித் சோமவன்ச தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளும்போது, வசதிகள் மற்றும் சேவைக்கட்டணம் தவிர்ந்த வேறு பணம் அல்லது நன்மைகளை அதிபர்கள் பெறுவார்களாயின், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இவ்வாறு மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து அதிபர்கள் இலஞ்சம் பெற்றது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிபர்களை சேவையிலிருந்து இடைநிறுத்தவுள்ளதாக கூறினார்.
இந்நடவடிக்கை மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.