இலங்கையின் வட பகுதியிலுள்ள திருகோணமலையில், ஒரு கோவிலுக்குள் இருந்து கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப் பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருகோணமலை நகர்ப்பகுதியின் மையத்தில் மடத்தடி சாலையில் பிரபல கிருஷ்ணன் கோயிலுக்குள் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தக் கோயிலுக்குள் இருந்து குண்டுகள் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியைத் தந்துள்ளது.
கோயிலின் உள்ளே பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறை ஒன்றினுள் இந்தக் குண்டுகள் இருந்தன. இந்த நான்கு குண்டுகளுமே பழுது எதுமின்றி வெடிக்கக்கூடிய ஆற்றலுடன் இருந்தன எனத் தெரிய வந்துள்ளது.
இதனைச் தற்செயலாகக் கண்டுபிடித்த கோயில் ஊழியர் ஒருவர், பின்னர் திரிகோணமலை போலீஸ் தலமையகத்திற்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக குண்டுகள் அகற்றும் பிரிவினர் விரைந்து வந்து 4 குண்டுகளையும் மிகப் பாதுகாப்பாக அங்கிருந்து அதனை எடுத்துச் சென்றனர்.
இந்தக் குண்டுகள் எப்படி கோயிலுக்குள் வந்தன? எப்போது வந்தன? என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுகளின் மேல் சில எழுத்துகள் இருந்த போதிலும், இந்தக் குண்டுகள் பற்றிய தகவல் அறிவதற்கு உதவக்கூடிய இலக்கியல் குறியீடுகள் முற்றாக அழிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.