News Update :

Wednesday, February 8, 2017

TamilLetter

இன்று பலப்பரிட்சை உச்சக்கட்டம்: வெல்லப் போவது யார், சசிகலாவா? பன்னீரா?


தமிழக அரசியல் உச்சக்கட்டப் பரபரப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பதவியில் அமர யாருக்கு அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டிய பலப்பரீட்சை தொடங்கிவிட்டது. வெல்லப் போவது யார், சசிகலாவா? ஓ.பன்னீரா..? 
இனறு இருதரப்பௌக்களையும் தமிழக ஆளுனர் சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது. இவர்கள் எவரும் 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். 
அதிமுக எம்எல்ஏக்களை பாதுகாப்பாக சசிகலா தரப்பு 'சிறை' வைத்திருந்தாலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று தெம்பாக கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு தற்போது அதிமுகவிடம் 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் பேரவைத் தலைவரைக் கழித்து விட்டால் மொத்தம் 134 உறுப்பினர்கள்தான். திமுக-89, காங்கிரஸ்-8, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்-1, நியமன உறுப்பினர்-1, என்ற கணக்கில் சட்டசபையில் எம்எல்ஏக்கள் உள்ளனர். 
இப்போது வரை 5 எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 60 எம்எல்ஏக்கள் வரை ஓபிஎஸ் பக்கம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சசிகலா தனது பாதுகாப்பில் வைத்திருக்கும் 130 எம்.எல்.ஏக்களும் சசிகலாவைத் தான் ஆதரிப்பார்களா? என்பது உறுதி இல்லை. 
ஒருவேளை 20 எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு கொடுத்தால் கூட சசிகலாவிற்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 114ஆக குறைந்து விடும். அதேநேரத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, தனியரசு, மற்றும் கருணாஸ் ஆகியோரின் ஆதரவு கடிதத்தையும் வாங்கி வைத்துள்ளாராம்.
தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு படையெடுப்பதால் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. மேலும் பலர் அடுத்தடுத்த நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரகசியமாக பலர் ஆதரவு தெரிவித்துள்ளனராம்.
இன்று தமிழகம் வரும் ஆளுநர் முன்பாக தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களை நிறுத்தி ஆட்சியமைக்க உரிமை கோருவார் சசிகலா. எனவே, அனைவரின் கண்களும் ராஜ்பவனை நோக்கியே உள்ளன. சசிகலா பெரும்பான்மையை நிருபிப்பாரா? அல்லது 1988- இல் சட்டசபையில் நடந்தது போல அதிமுக வரலாறு மீண்டும் திரும்புமா? என்ற பரபரப்பு நிலவுகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-