(ஹாசிப் யாஸீன்இ அகமட் எஸ். முகைடீன்இ றியாத் ஏ. மஜீத்)
கல்முனை கரையோர மாவட்ட கடினபந்து விளையாட்டுக் கழகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதி சபாநாயகரும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவருமான திலங்க சுமதிபாலவிடம் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் எடுத்துக்கூறியதன் பேரில் இவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்கு வெள்ளிக்கிழமை (10) கல்முனை மஹ்மூத் மகளில் கல்லூரிக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் திலங்க சுமதிபால விஜயம் செய்து கரையோர பிரதேச விளையாட்டுக் கழகங்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போதுஇ கல்முனை கரையோர கிரிக்கெட் சங்கத்தை அமைப்பதற்கான நியாயமான காரணங்களை இங்கு எடுத்துரைக்கப்பட்டது. கரையோரப் பிரதேசத்திலுள்ள சுமார் 48 கடினபந்து கிரிக்கெட் அணிகளின் பிரதிநிதிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் திலங்க சுமதிபாலவின் வருகையைக் கௌரவிக்கு முகமாக கழக பிரதிநிதிகளினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் ஆலோசகரும்இ கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்இ லெஜன் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.அஸீம் ஆகியோர் விளையாட்டுக் கழகங்களின் கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினர்.
கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் திலங்க சுமதிபால இங்கு உரையாற்றும்போது
இங்குள்ள விளையாட்டுக் கழகங்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதுடன் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸூடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்ததுடன் இப்பிரதேசத்தில் கிரிக்கெட் விளையாட்டு முன்னேற்றம் அடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
அத்தோடு பாடசாலை மற்றும் கழக மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும்இ எனது நண்பரான பிரதியமைச்சர் ஹரீஸூடன் இணைந்து அதற்கான முயற்சிகளை எடுக்கவுள்ளேன்.
கிழக்கு மாகாணத்தின் மத்திய இடமான மட்டக்களப்பில் மத்திய பயிற்சி நிலையத்தை அமைத்து வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவாஇ கே.எம்.தௌபீக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.