ஜமால்தீன்
முன்னாள் அமைச்சர்களான சேகு இஸ்ஸதீன் மற்றும் அதாஉல்லாவின்; அரசியல் கலாச்சாரம்; தவத்தின் வருகைக்கு பின்புதான் மாற்றமடைந்தது என கலாநிதி பைஸல் அலி தெரிவித்தார்.
மறுமலர்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த அரசியலும் மனித உரிமையும் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்
அக்கரைப்பற்று மக்கள் அரசியல் தொடர்பாக சிறந்த அறிவை பெற்றுள்ளனர்.உணர்ச்சிகளைத் தாண்டி அறிவு ரீதியான செயற்பாடுகளுக்கே அவர்கள் என்றுமே முன்னுரிமை வழங்கி வந்துள்ளனர்.
அப்படிப்பட்ட தெளிவான மக்களின் குரல்வலைகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகவே நசுக்கப்பட்டே வந்துள்ளது.
மக்கள் தமது சுயமான கருத்துக்களை தைரியமாக சொல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலை தோன்றியே காணப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வன்முறை அரசியல் கலாச்சாரத்தை அதன் பிற்பாடு வந்த அதாஉல்லாவினால் உச்ச நிலையை அது அடைந்தது. இதற்கு சிறந்த உதாரணங்கள் நமது இளைஞர்கள் தினமும் பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றங்களிலும் தமது வாழ்க்கையை தொலைத்தனர்;.
இன்று புதிய பரிமாணத்துடன் புதிய சிந்தனையில் நாகரிகமான வன்முறையற்ற அரசியல் கலாச்சாரத்தை தவம் அக்கரைப்பற்றில் ஏற்படுத்தியுள்ளார்.இதற்கான அடித்தளத்தை முஸ்லிம் காங்கிரஸ் அவருக்கு வழங்கியுள்ளது.
அக்கரைப்பற்றில்; தற்போது ஜனநாயக சூழல் பெருமளவில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்ற போதும் பழைய எச்சங்கள் ஆங்காங்கே தலையை நீண்டுகின்றது.
இந்த ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தம்பி தவத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் கலாநிதி பைஸல் அலி