நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் சவாலை மிகவும் மகிழ்ச்சியுடன் தான் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முறி வர்த்தமானியில் தனது பெயரை இரகசியமாக இணைத்த சம்பவம் தொடர்பில் முடியும் என்றால் வழக்கு தாக்கல் செய்யவும் என மஹிந்த சவால் விடுத்துள்ளார்.
நேற்று சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முறி வர்த்தமானியில் தனது பெயரை இரகசியமாக பயன்படுத்தியமை தொடர்பில் தான் மாத்திரமின்றி முழு நாட்டின் மக்களும் சட்டத்தின் முன் செல்ல கூடும் என கூறிய மஹிந்த, நிதி பிரச்சினை பொதுவாக அனைத்து மக்களையும் தாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இந்த பிரச்சினை முழுநாட்டின் சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ளது. இன்று அல்லது நாளை தியத்தலாவையில் இருந்து கொழும்பு சென்று இது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வேன்.
இந்த பிரச்சினை தொடர்பில் சட்டத்தின் முன் செல்லுமாறு சவால் விடுவதில் பயனில்லை. நான் அந்த சவாலை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன் என மஹிந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.