News Update :

Thursday, February 23, 2017

TamilLetter

கருணாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி




முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கொலை செய்ய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள கோவில் ஒன்றுக்கு கருணா சென்ற வேளை, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் அவரை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி கருணா மட்டக்களப்பிலுள்ள கோவிலுக்கு சென்ற போது, அவரது உடம்பில் மோதிய ஒருவர், அவரது கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.(se)

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-