தகவல் அறியும் உரிமைச்சட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்று ஊடக மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நாடாளுன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாளை முதல் நாடளாவிய ரீதியில் தகவல்களை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இது குறித்து அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்ததாவது.
தகவல் அறியும் சட்டம் கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்டு 6 மாத காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி 6 மாத காலம் பூர்த்தியடைகின்றது. நாம் இன்று சட்டவரை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். நடைமுறையில் உள்ள 51 அமைச்சுகளில் 50 அமைச்சுக்களுக்கான தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மிகுதி ஒரு தகவல் அதிகாரியும் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். மாவட்ட மட்டத்தில் மாவட்டச் செயலர்கள் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர். மாவட்ட ரீதியிலும் தகவல் அதிகாரிகளுக்கான மேலதிக பயிற்சிகளை வழங்கி வருகின்றோம். நாளை 3ஆம் திகதி முதல் சட்டம் நடைமுறைக்கு வருகின்றது. என்றார்.