News Update :

Tuesday, February 7, 2017

TamilLetter

தீபாவுடன் இணையத் தயார்-முதல்வர் பன்னீர் செல்வம்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களைக் குறித்து விசாரிக்க விசாரணை குழு ஒன்று அமைக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். விசாரணை குழுவிற்கு தற்போது பணியில் இருக்கும் நீதிபதிகளே தலைமையேற்பர் என அவர் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், "ஜெ.வின் மரணம் குறித்த சந்தேகங்களை விசாரிப்பதும், விசாரணை குழு அமைப்பதும் மாநில அரசின் கடமை. ஆகவே இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும்" என கூறினார்.
மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு காலம் பதில் சொல்லும் என கூறிய அவர், ஆளுநர் வித்யாகாசர் ராவ் சென்னை வந்தவுடன் அவரைச் சென்று சந்திக்கவிருப்பதாகவும் தன் ராஜினாமாவை மீட்க வலியுறுத்தவிருப்பதாகவும் கூறினார்.
"அதிமுகவிற்கு எந்த நிலையிலும் நான் துரோகம் செய்யவில்லை. பன்னீர் செல்வம் துரோகம் செய்தார் என்ற பெயர் எப்போதும் ஏற்பட்டதில்லை. ஜெயலலிதாவிற்கு சோதனை வந்தபோது 2 முறை முதல்வராக பொறுப்பேற்றிருந்தேன் என்பது முக்கியமானது" என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற முறையில் தீபாவை நான் மதிக்கிறேன். என்னுடன் இணைந்து செயல்பட தீபாவிற்கு நான் அழைப்பு விடுக்கிறேன் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-