குல்ஸான்
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி விஜயம் மேற் கொண்டர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் அழைப்பிதழுக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (01) அக்கரைப்பற்றுக்கு விஜயம் மேற் கொண்டார்.
இந்த விஜயத்தில் அக்கரைப்பற்று ஆதரா வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி தற்போது வைத்தியசாலையில் இடம்பெரும் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடா்பாக ஜனாதிபதியிடம் முறையிட்டார்.
மாகாண சபை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதர அமைச்சருக்கு பணிப்புரை வழங்கினார்
இந் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜீத சேனாரட்டண,அமைச்சர் தயா கமகே, பிரதி சுகாதார அமைச்சர் பைஸல் காசீம்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உட்பட பல அரசியல் பிரமுகா்களும் கலந்து கொண்டனர்.