ஆந்திரா-ஒடிசா எல்லையில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் பலியான போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் பொதுமக்கள் ஒருவரும் பலியாகியுள்ளார்.
ஆந்திரா-ஒடிசா மாநில எல்லையில் உள்ள கோரபுட் மாவட்டம் சுங்கி அருகே போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, மாவோயிஸ்டுகள் வைத்திருந்த கண்ணி வெடியில் அவர்கள் பயணித்த கார் சிக்கியது. அப்போது, அப்பகுதியில் அப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்தவரும் எதிர்பாராதவிதமாக இந்த கண்ணி வெடி தாக்குதலில் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மாவோயிஸ்டுகளைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.