களுத்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் சமயான் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
அடையாளந்தெரியாத சிலர் சிறைச்சாலை வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.