துபாய் நீதிமன்றம் ஒன்றால் ஆறு இலங்கையர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக துபாய் ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
தங்கம் உள்ளிட்ட மேலும் பல பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த ஆறு இலங்கையர்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் கடந்த 2015 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் திகதி அந்த நாட்டு காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு சாரதி உள்ளிட்ட ஐந்து வேலையற்றவர்கள் அடங்களாக ஆறு பேர் இவ்வாறு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த ஆறு இலங்கையர்களும் 26 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை காலம் நிறைவடைந்தப் பின்னர் குறித்த ஆறு பேரையும் நாடு கடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.