இரண்டாம் உலக போரின் போது ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று அதிக விலைக்கு ஏலம் போனது.
உலகையே மிரட்டிய சர்வாதிகாரி ஹிட்லர், தனது தளபதிகளுக்கு உத்தரவிடவும் தனிப்பட்ட உபயோகத்திற்காகவும் தொலைபேசி ஒன்றினை பயன்படுத்தி வந்தார். குறிப்பாக, தான் ஆட்சி புரிந்த இறுதி இரண்டு ஆண்டுகளில் இந்த தொலைபேசி வழி தான் பல முக்கியமான உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.
ஹிட்லரின் பெயர் பொறிக்கப்பட்ட இந்த தொலைபேசி, அவரின் மரணத்திற்கு பிறகு 1945ம் ஆண்டு பதுங்கு குழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது. இதில் சுவாஸ்திக் சின்னமும் கழுகு சின்னமும் அச்சடிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம். தொடக்கத்தில் கருப்பு நிறத்தில் இருந்த அந்த தொலைபேசி பின்னர் மங்கலான ஆரஞ்சு வண்ணத்தில் வண்ணம் பூசப்பட்டது.
வரலாற்றுப்பூர்வமான இந்த தொலைபேசி ஏலத்திற்கு வந்தது. ஏறக்குறைய 243,000 அமெரிக்க டாலருக்கு அது ஏலம் போனது. இதோடு, ஹிட்லரின் 1000க்கும் மேற்பட்ட பொருட்களும் ஏலத்திற்கு விடப்பட்டன.