News Update :

Monday, January 23, 2017

TamilLetter

பொலிஸ் நிலையம் எரிக்கப்பட்டது; (VIDEO)



ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய தமிழக மக்களைப் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதில் போலீஸ்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். சென்னையில் உள்ள ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எரிக்கப்பட்டது.
மெரினா கடற்கரை, அலங்காநல்லூர் உட்பட ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட இளைஞர்களைப் போலீசார் கலையும்படி கூறினர். ஆனால், இளைஞர்கள் வெளியேற மாட்டோம் என பிடிவாதமாக இருந்ததால் போலீசார் வலுக்கட்டாயமாக அவர்களைப் பிடித்து இழுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் உண்டானது.

காணொளி: நன்றி தந்தி டிவி
அலங்காநல்லூரில், வலுக்கட்டாயமாக கூட்டத்தைக் கலைக்க முயன்றபோது போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீஸ்காரர்கள் மீது போராட்டக்காரர்கள் கல் வீசினர். இவர்களுக்கு எதிராக போலீசார் தடியடி நடத்தினர். 
இந்நிலையில், சென்னை, திருவல்லிகேணியில் உள்ள ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தை போராட்டக்காரர்கள் எரித்தனர். முன்னதாக சாலையோரத்தில் இருந்த வாகனங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். பின்னர், டாக்டர் நடேசன் சாலையில் இருந்த ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தீயிட்டு கொளுத்தினர். சம்பவத்தின் போது, காவல் நிலையம் உள்ளே ஊழியர்கள் இருந்தனர். 
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார், காவல் நிலையத்தின் பின் பக்க கதவை உடைத்து பெண் போலீசார்களைக் காப்பாற்றினர். சற்றும் எதிர்பாரா விதமாக கலவரம் வெடித்ததால் தமிழகம் முழுதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-