News Update :

Sunday, January 22, 2017

TamilLetter

உலகை ஈர்த்த 'ஜல்லிக்கட்டு' பெண் வேதனை -(VIDEO)



ஜல்லிக்கட்டு மீது எனக்குப் பற்றுண்டு என் இனத்தின் மீது எனக்குப் பற்று உண்டு. நான் ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணியின் போது நான் கோஷமிட்டதற்காக என் மீது அரசியல் சாயம் பூசவேண்டாம் என்று ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் கோஷமிட்டதன் வழி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பான இடத்தைப் பிடித்த மதுரைப் பெண் தெரிவித்தார்.  
'சின்னம்மா சின்னம்மா, ஒபிஎஸ் எங்கம்மா' என்று கேட்டு கோஷமிட்ட  மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் தன்க்கு எதிராக கிளப்பிவிடப்பட்டிருக்கும் அரசியல் புரளி தொடர்பாண வேதனையை வெளிப்படுத்தினார். சென்னை மெரீனா கடற்கரையில் தமிழ் உணர்வு டன் முழக்கமிட்ட இளம் பெண்ணை மறந்திருக்க மாட்டார்கள் யாரும். உலகப் புகழ்பெற்று விட்ட அவர் தற்போது பெரும் வேதனையில் உள்ளார். 
அவருக்கு எதிராக அரசியல் முத்திரை குத்தி, குறிப்பிட்ட கட்சியினர் அவரை முகநூலில் மிகக் கடுமையாக விமர்சித்து வருவதே இதற்குக் கார   ணமாகும். ஆனால் தன் மீதான அரசியல் முத்திரையை முற்றாக மறுத்துள்ளார் 
தான் மிக மிக சாதாரணப் பெண். மிகச், சாதாரணமான முறையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறியுள்ள அவர், தனக்கும் ஜல்லிக்கட்டுக்கும் உணர்வுப்பூர்வமான நெருக்கம் இருப்பதாகவும், அதன் அடிப்படையில்தான் போராட்டத்தில் கலந்து கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் கூறியதாவது: எனக்கும் எந்தக் கட்சிக்கும் தொடர்பு கிடையாது. அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடை யாது. எந்தக் கட்சியையும் எனக்குத் தெரியாது. நான் திமுகவும் இல்லை, அதிமுகவும் இல்லை. தமிழ் உணர்ச்சியோடு, தமிழ்நாட்டுக்காக பேச வந்தேன். தனி ஆளாக மெரீனா போராட்டத்தில் கலந்து கொண்டேன். 
Video: yoyotvtamil
என் பின்னால் நின்றிருந்த நபர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று எனக்குத் தெரியாது. அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அங்கு பலரும் கூடியிருந்தனர். எந்த விமர்சனத்திற்காகவும் நான் பயப்படப் போவதில்லை . நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசவும் இல்லை. எல்லோரையும் போலத்தான் கோஷமிட்டேன். 
ஜல்லிக்கட்டுடன் உணர்வுப்பூர்வமாக நெருங்கிய தொடர்புகொண்டவள் நான். ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்தான் நானும். வாடிவாசலுக்கு அருகில்தான் எனது வீடு. அந்த உணர்வில்தான் நான் கலந்து கொண்டேன். 
அந்த உணர்வின் அடிப்படையில்தான் போராட்டத்தில் பங்கேற்றேன் யாரையும் அவமானப்படுத்தவில்லை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அம்மாவை நான் குறிப்பிட்டு விமர்சித்துப் பேசவில்லை. அதேபோலத்தான் பிரதமர் மோடியையும் நான் திட்டமிட்டு விமர்சிக்க வில்லை.  
அவமானப்படுத்தும் நோக்கில் நான் விமர்சித்து கோஷமிடவில்லை. அனைவரும் எப்படி முழக்கமிட்டார்களோ, அதேபோலத்தான் நானும்  முழக்கமிட்டேன். என் தமிழ் இனத்திற்காக, ஜல்லிக்கட்டுக்காகத்தான் நான் போராடினேன். உயிருள்ளவரை போராடுவேன். 
போராட்டத்தின்போது நான் கோஷமிட்டபோது தவறுதலாக, தவறான வார்த்தைகள் வந்திருக்கலாம். அது யாரையேனும் வருத்தப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்டவாறு கூறியுள்ளார் அப்பெண்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-