News Update :

Wednesday, January 25, 2017

TamilLetter

பாடகர் K.J.யேசுதாசுக்கு நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருது



பிரபல பின்னணி பாடகர் K.J.யேசுதாசுக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
இசை துறைக்கு அவர் வழங்கியுள்ள பங்களிப்பை பாராட்டி அவருக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே 1975ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2002ம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் வென்றுள்ளார்.
இதற்குமுன் பத்மவிபூஷன் விருதை எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, லதா மங்கேஷ்கர், பாலமுரளி கிருஷ்ணா போன்ற இன்னும் ஒரு சில பாடகர்களே பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-