News Update :

Friday, January 27, 2017

TamilLetter

சர்வதேச ஊடகங்களுக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கருத்து




எஸ்.கார்த்திக்கேசு



சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கில் பெய்துவரும் அடை மழையினால்  அம்பாறை, மாவட்டத்தின் கரையோர   தாழ்நிலப் பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக  ஆயிரக் கணக்கான  குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் இன்று வெள்ளிக் கிழமை  சர்வதேச ஊடகங்களுக்கு கருத்துத்  தெரிவித்தாா்..


 குறிப்பாக  . அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை திருக்கோவில், பொத்துவில், கல்முனை, நிந்தவூர், சம்மாந்துறை  உள்ளிட்ட கரையோர பிரதேசங்களே அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது


இதே வேளை  அம்பாரை வீதி ,கிட்டங்கி பாலம்,,மாவடிப்பள்ளி வீதி என்பன வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது இதன் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுள்ளதோடு மக்கள் பல்வேறு சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு அறுவடைக்கு தயாரகவிருந்த பல்லாயிரக் கணக்கான  நெல் வயல்களில் நீர் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் வெறும் கையோடு திரும்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே பாதிப்புகள் தொடர்பாக அணர்த்த நிவாரண சேவைகள்  அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இம் மக்களுக்கான நிவாரண உதவிகளை உடன் வழங்குமாறும் மாகாண சபை உறுப்பினர் தவம் கோரிக்கை விடுத்துள்ளார்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-