News Update :

Saturday, January 21, 2017

TamilLetter

வெளிப்பட்டது பஷீரின் துரோகத்தனம்




எதுக்கெடுத்தாலும் தலைவரை நோன்பு திறக்க விடவில்லை என்று பல வருடங்களாகவே கொஞ்ச கூட்டம் கத்திக் கொண்டே இருக்கின்றது.இதை விட்டால் வேறு ஒன்றுமே இல்லை

ஆமாம் தவம் எதிரணி அரசியலில் ஒரு தலைமையின் கீழ் செயற்பட்டார்.அந்த தலைமைக்கு கட்டுப்படுவது எவ்வளவு கடமையோ அதை போன்று எதிரிகளையும் வீழ்த்துவதும் கடமைதான் அதைத்தான் தவம் செய்தார்.அந்த கட்சியிலும் அவர் துரோகம் செய்யவில்லை.

அதாஉல்லாவின் கொள்கை அவரது குடும்பத்தின் நலன் சார்ந்ததாக இருந்ததனால்தான் அந்த கட்சி ஊடக பெற்ற மாநகர சபை உறுப்பினர் பதவியை துறந்து விட்டுத்தான் எமது முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

தவம் அதாஉல்லாவோடு இருக்கும் போது அவருக்கெதிரான எந்த துரோகத்தனத்திலும்; ஈடுபடவில்லை அதாஉல்லாவை விட்டு வெளியில் வந்து தனியாளாக நேருக்கு நேர் நெஞ்சை நிமிர்த்தி சவால் விட்டான்.

அக்கரைப்பற்றுக்குள் முஸ்லிம் காங்கிரஸ் நுழைய முடியாத போது நமது  கட்சியின் கொடியை  அந்த மண்ணில் பறக்க விட்டதும் இந்த தவம்தான்;.

நமது கட்சிக்கு எதிராக  அதாஉல்லாவின் அட்டாகசம் அம்பாரை மாவட்டம் முழுவதும் பரந்து பட்டுக் கிடந்த போது அதாஉல்லாவை தனது சொந்த மண்ணிலே தோற்கடித்து வரலாறு படைத்தவன் தவம்தான்

தலைமைக்கு கட்டுப்படுவது இஸ்லாம் காட்டிய வழி அதைத்தான் நேர்மையாக கடைப்பிடிக்கிறான் உங்களைப் போன்று மறைந்து நின்று புறம் பேசுவது.சதித் திட்டம் தீட்டுவது,பேரம் பேசுவது,புற முதுகில் குத்துவது எல்லாம் தவத்தினால் செய்ய முடியாது

சமூகம் தலைமை,கட்சி எனும் கோட்பாட்டின் அடிப்படையில்தான் தவத்தின் வாழ்க்கையும்,அரசியல் நடவடிக்கையும் இருந்து வருகின்றது

கௌரவ தவிசாளரே உங்களது வரலாறு இதற்குள் அடங்குமா?

நீங்கள் தமிழ் மக்களின் இரத்தத்தை உறிஞ்சித்தானே பதவிக்கு வந்தவர்.அது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அன்றைய காலகட்டத்தில் தமிழ் பயங்கரவாத குழுவோடு இணைந்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்பட்டதோடு முஸ்லிம் தனவந்தவர்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொண்டிர்கள் என்பதை புத்தகமாக எழுதினால் எப்படியிருக்கும் தோழரே

தமிழ் மக்கள் நம்பிக்கை அடிப்படையில் கொடுத்த எம்.பி பதவியை எடுத்துக் கொண்டு துரோகத்தையும் கண்ணீரையும் தானே அந்த மக்களுக்கு பரிசாக வழங்கியவர் நீங்கள் தானே தோழரே

முஸ்லிம் காங்கிரஸில் மூன்று முறை தேசியப்பட்டியல் வழங்கப்பட்ட போதெல்லாம் கடவுளாக தெரிந்த தலைவர் இன்று உங்களுக்கு எமனாக காட்சியளிப்பது எப்படி தவிசாளரே?

மஹிந்தவை தோற்கடிக்க முழு முஸ்லிம் சமூகமும் ஒன்று திரண்ட போது; நீங்கள் மட்டும் மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்பட்டதை நம் சமூகம் இன்னும் மறக்கவில்லை தவிசாளரே

கட்சிக்கும் தலைமைக்கும் தெரியாமல் அமைச்சை பின் கதவால் எடுத்துக் கொண்டு வந்ததை என்னவென்று சொல்ல தவிசாளரே

பல வருடங்களாக எம்.பியாக அமைச்சராக ஏன் கட்சியின் தவிசாளராக இருந்த போதும் உங்கள் ஊரில் உள்ள மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ளாமல் அலி சாஹீரிடம் நகர சபையை  ஒப்படைத்தார்களே இன்னுமா உங்களுக்கு புரியவில்லை  தவிசாளரே மக்கள் பார்வையில் எப்போதும் நீங்கள் வில்லந்தான்

 தான் பிறந்த சொந்த ஊரில்  500 வாக்குகளை பெற முடியாத உங்களால் எப்படி நேர்மையாக சிந்திக்க முடியும் அதனால்தான் சதிகளை புத்தக வடிவில் கொண்டு வருகின்றீர்கள் தவிசாளரே

சரி மக்கள்தான்   உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்   கட்சியில் உள்ள உயர்பீட உறுப்பினரகள்; யாராவது உங்களுக்கு ஆதரவாக இருக்கின்றார்களா தவிசாளரே?

உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லையா? தவிசாளரே

மஹிந்தவிடம் வாங்கிய அந்த சன்மானங்களை இறுதிக் காலம் வரை நன்றாக  பயன்படுத்தி நிம்மதியாக  வாழுங்கள் தோழரே


கிளைக் குழு  செயலாளர்

முஸ்லிம் காங்கிரஸ்

தைக்கா நகர்

அட்டாளைச்சேனை




TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-