முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சி தலைவர்களின் பிரஜா உரிமையை இரத்துச் செய்வதற்கு ரணில் – மைத்திரி அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்து.
தேசிய சுதந்திர முன்னணி இதனை தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவர் ஜயந்த சமரவீரவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரை அரசியல் ரீதியில் தனிமைப்படுத்த ஐக்கிய தேசிய கட்சியினர் முயற்சிக்கின்றனர். குற்றவியல் நீதி ஆணைக்குழுவை அமைக்க போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலமே இது நடக்கவுள்ளது. இதன்போது மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படும் மற்றைய தலைவர்களையும் தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் மூலம் எதிர்க்கட்சியே இல்லாத நிலைமையை ஏற்படுத்த ரணில் – மைத்திரி அரசாங்கம் முயற்சிக்கின்றதென என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.