ரீ.கே.ரகுமத்துல்லா
மறுமலர்ச்சி சமூக சேவை அமைப்பானது அம்பாறை மாவட்டத்திலுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்ககைத்தரத்தையும் மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிகளில் உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் கல்வித்துறையின் வளர்ச்சிக்காக பாரிய பங்களிப்பினை பல்லாண்டு காலமாக இம்மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் வருமானம் குறைந்த குடும்பங்களை தெரிவு செய்து அக்குடும்பங்களின் கல்வி கற்று வரும் மாணவர்களுக்காக கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவத்தின் நிதியொதுக் கீட்டின் மூலம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல நு{ற்றுக் கணக்கான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை மறுமலர்ச்சி நிறுவனம் வழங்கி வருகி;ன்றது.
இத்திட்டத்திற்கமைய இன்று(08) அட்டாளைச்சேனை 06 ஆம் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மறு மலர்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ஏ.எல்.றமீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
விசேட அதிதியாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் இளைஞா் கூட்டமைப்பின் தலைவருமான தமீம் ஆப்தீன்,ஆசிரியரும் அரசியல் பிரமுகருமான எம்.ஜே.எம்.அன்வர் நெஷாத்,சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறுாஸ்,அமைப்பின் பிரதித் தலைவா் ரஜ்மின் உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்