News Update :

Tuesday, January 31, 2017

TamilLetter

பெற்றோர்களுக்கு கல்வியமைச்சின் முக்கிய அறிவித்தல்!




மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிக்கும் போது பற்றுச்சீட்டு இன்றி பணம் அறவிடும் பாடசாலைகள் தொடர்பில் பெற்றோர்கள் முறைப்பாடுகள் தெரிவிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பற்றுச்சீட்டுகளின்றி பாடசாலைகளில் பணம் பெற்றுக்கொள்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் தங்களது முறைப்பாடுகளை வலயக் கல்வி அலுவலகத்தில் அல்லது உள்ளூர் அலுவலகத்தில் தெரிவிக்க முடியும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-