News Update :

Wednesday, January 4, 2017

TamilLetter

மாகாண சபை உறுப்பினர் ஜவாத்தின் பொய் நாடகமும் அறிக்கையும்



சேனையுர் பர்ஸான்

தனக்கு எதிராக அட்டாளைச்சேனை மக்கள் ஒன்று திரண்டுள்ளதை பார்த்து அதிர்ந்து போன மாகாண சபை உறுப்பினர்  ஜவாத் அதைச் சமாளிப்பதற்கு இன்று தான் கவலைப்படுவதாகவும் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவதை தான் தடுக்கவில்லையெனவும் அறிக்கைவிடுகின்றார். 

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் நாங்கள் ஆறுபேர் இருக்கத்தக்க எங்கள் கண்முன்னே ஹஸனலிக்கு ஆதரவாக பேசிவிட்டு இன்று நான் அப்படி பேசவில்லையென கூறுவது எவ்வளவு கேவலமானது என கட்சியின் மூத்த உயர்பீட உறுப்பினர் ஒருத்தர் தெரிவித்தார்.

எமது அட்டாளைச்சேனை மக்கள் இரண்டு முறை ஜவாத்துக்காக வாக்களித்திருந்தும் எந்தவித நன்றிக் கடனுமின்றி எமதூருக்கு வழங்கப்பட வேண்டிய உரிமையை தடுப்பதற்காக உயர்பீடக் கூட்டத்தில் அத்தனை பேர் முன் வாதடியதை நாங்கள் அறியாத கூட்டமல்ல 

எமதூரைச் சேர்ந்த கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் எஸ்.எம்.ஏ.கபூர்  தேசியப்பட்டியல் தொடர்பாக நியாயங்களை எடுத்துக் கூறும் போது இடையிடையே ; தடங்களை ஏற்படுத்தி ஹஸனலிக்குத்தான் தேசியப்பட்டியல் வழங்க வேண்டுமென கூக்குரலிட்ட போது ஆத்திரமடைந்த சட்டத்தரணி கபூர் (ஜவாத்) உங்களைப் பார்த்து உரத்த குரலில் திட்டி அமரவைத்ததை பொய் என்று சொல்கிறாரா? 

அட்hளைச்சேனையின் 30 வருடகால பிரச்சினைகளைப்பற்றி பேசப்படுவதையே உங்களால் ஜீரணிக்க முடியாமல் போகின்றதே அப்படியானால்; எப்படி எங்கள் ஊருக்கு உங்களால் எம்.பியை பெற்றுத் தர முடியும?; 

மாகாண சபை உறுப்பினர் ஜவாத் நீண்ட காலமாகவே ஹஸனலிக்கு எம்.பி வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு அதற்காகவே பல பேருடன் மறைமுகமான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வந்ததை எல்லோரும் அறிவர் எனவே எல்லாவற்றையும் கச்சிதமாக செய்துவிட்டு இன்று எமதூரைப் பார்த்து வேறு கதை சொல்கின்றீர்கள்-

காலம் எல்லோருக்கும் பதில் சொல்லும்


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-