News Update :

Sunday, January 29, 2017

TamilLetter

பொத்துவில் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி














பொத்துவில் யாஸீர்


நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு உட்பட்டு வரும் பொத்துவில் பிரதேசத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பாரிய அளவிளான அபிவிருத்தி திட்டங்களை மேற் கொள்வதற்கு நகர திட்டமிடல் அமைச்சு முன்வந்துள்ளது.

இத் திட்டம் தொடா்பான கலந்துரையாடல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில்  இடம் பெற்றது.

குறிப்பாக பொதுச் சந்தை,பஸ் தரிப்பிடம்,வீதி அபிவிருத்தி,விளையாட்டு மைதான அபிவிருத்தி என்பன தொடா்பாக ஆராயப்பட்டு இதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டன.

அத்தோடு பொத்துவில் மக்களுக்கு சொந்தமான விவசாயக் காணிகளை உடனடியாக மீட்பது தொடா்பாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதியமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,பைஸல் காசீம் உட்பட அரசியல் பிரமுகர்களும் அதிகாாிகளும் கலந்து கொண்டனர்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-