News Update :

Tuesday, January 3, 2017

TamilLetter

அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக முதலாவது வரலாற்று போராட்டத்தை செய்யவுள்ள அட்டாளைச்சேனை





குல்ஸான்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கிமுக்கு எதிராக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ளதாக அறிய முடிகிறது.

அட்டாளைச்சேனை இளைஞர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர் கூட்டமைப்பின்  தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான  ஆப்தீன் தமிம் தலைமையில் இப்பாரிய பேரணியில் அதிகளவான இளைஞர்களை ஈடுபடுத்தும் முகமாக   அட்டாளைச்சேனை,பாலமுனை,ஒலுவில்,ஆலம்குளம் ஆகிய பிரதேசங்களில் தமது ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பற்றி ஏற்பாட்டாளர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்பட வேண்டிய  தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாமல் தனி நபரை திருப்திப்படுத்தும் முகமாக ஹஸனலிக்கு வழங்கப்படுவதை கண்டித்தே இவ் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எமது பிரதேசம் கடந்த முப்பது வருடங்கலாக சமூகத்திற்காக எதையுமே எதிர்பார்க்காமல் கட்சிக்காக வாக்களித்து வந்த போதிலும் இதுவரையும் கட்சியினாலும் அதன் தலைமைகளாலும் எமது பிரதேசம் புறக்கனிக்கப்பட்டே வந்துள்ளது.

அத்தோடு ஒவ்வொறு தேர்தல்களிலும் கட்சியின் தலைமைத்துவம் பல முறை  மக்கள் முன் தோன்றி தேசியப்பட்டியல் இம் முறை நிட்சயம் வழங்கப்படும் இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என வீரவசனம் பேசி மக்களை ஏமாற்றி வாக்குகளை கொள்ளையடித்ததை கண்டித்தே இப் போராட்டத்தில் இளைஞர்களும் ஊரை நேசிக்கும் மக்களும் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக ஏற்பாட்டாளர் தமீம் ஆப்தீன் தமிழ் லெட்டர் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்தார்.

நமது இலட்சியத்தை அடைய எல்லோரும் ஒற்றிணையுமாறு அட்டாளைச்சேனை இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் ஆப்தீன் சமூக ஆர்வலர்களுக்கு அழைப்பும்  விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-