மனைவி, குழந்தையின் கண் எதிரே கணவரை புலிகள் அடித்துகொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் சங்காயின் தென் பகுதியில் இருந்து சுமார் 200 கி.மீ., தொலைவில் நிங்போ எனும் உயிரியல் பூங்கா உள்ளது.
இந்த பூங்காவிற்கு ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார்.
இதன்போது அவரை பூங்காவில் இருந்த புலிகள் திடீரென தாக்கி, உள்ளே இழுத்துச்சென்றது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள், உடனடியாக அவரச அலாரத்தை அடித்துள்ளனர்.
சம்பவம் அறிந்து அங்கு விரைந்த பூங்கா பாதுகாவலர்கள், பட்டாசுகளை கொழுத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு புலிகளை விரட்டியடித்து குறித்த நபரை மீட்டுள்ளனர்.
எனினும் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தையடுத்து பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மனைவி, குழந்தையின் கண் முன்னே கணவரை புலிகள் அடித்துகொன்ற இச் சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.