News Update :

Thursday, January 19, 2017

TamilLetter

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர் ரஹ்மான் இன்று உண்ணாவிரதம்



தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தன் வீட்டில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஆஸ்கர் நாயகன்  ஏ.ஆர் ரஹ்மான் அறிவித்துள்ளார். 
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், அதற்குத் தடையுத்தரவைப் பெற்றுள்ள பீட்டா அமைப்புக்கு எதிராகவும் தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள், தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும்  பரவி வருகின்றன. 
நான்காவது நாளாக நடைபெறும் இப்போராட்டத்தில் அனைத்து நிலை மக்களும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில்,  ஆஸ்கர் நாயகனான ஏ.ஆர் ரஹ்மான், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். 
"ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் தமிழகத்தின் உணர்வுகளை ஆதரித்து நான் நாளை ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்" என அவர் தெரிவித்தார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-