News Update :

Monday, January 16, 2017

TamilLetter

ஜல்லிக்கட்டு காளைகளை விரட்டிச் சிறைபிடித்த காவல்துறை!



ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் தடையுத்தரவுக்கு எதிர்ப்பைக் காட்டும் நோக்கில் அவிழ்த்து விடப்பட்ட காளை களை போலீசார் விரட்டிச் சென்று சிறை பிடித்தனர். மேலும், அந்தக் காளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இங்கு ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த போலீசார் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக கூறி, தடியடி நடத்திய கூட்டத்தைக் கலைத்தனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கறுப்பு கொடியேந்தி பிரமாண்ட பேரணி நடத்தினர். அப்போது தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற இளைஞர்கள் காளைகளை கட்டவிழ்த்து விட்டனர்.
இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மடக்கிப் பிடித்த போலீசார் அவற்றை சிறைபிடித்து சென்றனர். 
காவல்துறையினர் நடத்திய திடீர் தடியடியால் போராட்டம் நடத்திய இளைஞர்கள் நாலாபுறமும் சிதறியோடினர். இதனால் அலங்காநல்லூர் பகுதியே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-