முகம்மட் முஸம்மில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் நேற்றிரவு கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கிம்; தலைமையில் இடம் பெறறது.
இக் கூட்டத்தில் பல பிரச்சினைகள் முன்வைக்கப்பட்ட போதும் குறிப்பாக தேசியிப்பட்டியல் விவகாரம் சூடு பிடித்திருந்தது.
ஆட்டாளைச்சேனையைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் தமது ஊரக்கு பாராளுமன்றப் பதவி வழங்கியே தீரவேண்டுமென தமது பக்க நியாயங்களை எடுத்துக் கூறினர்.இருந்த போதும் இவர்களின் தனி ஆளுமை மற்றும் இவர்களுக்கு கட்சியில் உள்ள செல்வாக்கு என்பன சபையில் கேள்விக்குட்பட்டிருந்தது இதன் காரணமாக இவர்களின் கோரிக்கை ஒரு பொருட்டாகவே தலைவரால் எடுத்துக் கொள்ளப்பட்டன.
;
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இந்த காலகட்டத்தில் வழங்க முடியாது எனவே கட்டாயமாக ; கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலிக்கே தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் அப்போதுதான் தற்கால அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற விதத்தில் அவரும் கட்சியும் செயற்பட முடியுமென கருத்துத் தெரிவிதத்தார் கல்முனையைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஜவாத்.
ஜவாதத்தின் இப் பேச்சினால் தடுமாறிய அட்டாளைச்சேனையை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் மூத்த முக்கிய உறுப்பினர்கள் ஒன்றுமே செய்ய முடியாமல் திகைத்து நின்றனர்.
அத்தோடு கட்சியின் பிரதி செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் ஏற்கனவே அட்டாளைச்சேனையின் பிரதிநிதிகள் ஹஸனலிக்கு எம்.பி கொடுப்பதற்கு சம்மதித்து ஒப்பமும் வைத்துள்ளீர்கள் அன்று பேசாத விடயத்தை இன்று ஏன் பேசுகின்றீரு;கள் என கேள்வியெழுப்பினார்.
அத்தோடு இன்னுமொறு உயர்பீட உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில் மாகாண அமைச்சை பெற்றுக் கொண்டு விட்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் கேட்பது அவ்வளவு நியாயமில்லையெனவும் மாகாண சுகாதார அமைச்சை பெறுவதற்கு முன் இதை யோசித்திருக்க வேண்டும் எனவும் பதிலளித்தார்.
எது எப்படியே அட்டாளைச்சேனை மக்கள் விழித்துக் கொள்ளாதவரை அவர்களுக்கான நியாயம் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் உண்மை