நுகேகொடையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் அரசாங்கத் தரப்பிலிருந்து பங்கேற்கவுள்ளவர்களின் எண்ணிக்கை ஆச்சரியமளிக்கிறது.
இந்தக் கூட்டம் வரலாற்று முக்கியத்துவமான ஒன்றாகும் என அவர் கூறியுள்ளார்.