இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட சமையல் ஏரிவாயு மற்றும் அடுப்புக்கள் என்பன மக்களிடம் கையளிக்கப்பட்டன.
இறக்காமம் பிரதேச செயலாளர் ஐ.எல்.நஸீர் தலைமையில் இ;ன்று(15) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் விவகார வேலை வாய்ப்பு செயலாளருமான ஏ.எல்.தவம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்க உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களான யு.கே.ஜபீர் மௌலவி,ஏ.எல்.நைஸர்,உட்பட பல அரசியல் பிரதிநிதிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்