News Update :

Saturday, January 21, 2017

TamilLetter

பதவியேற்றவுடன் டிரம்ப் முதல் உத்தரவு




அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் உடனடி நடவடிக்கையாக டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபரின் ஒபாமாவின் சுகாதாரக் காப்புறுதித் திட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைக்க அதிபருக்கான நிர்வாகச் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
ஒபாமாவின் இந்தத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமைகளைக் குறைப்பதற்காகவே அவர் இந்த உத்தரவில் கையெழுத்திட்டார் என்று அவரது அதிகாரிகள் கூறினர். 
பதவியேற்பு வைபவத்தில் பேசிய போது, "எனக்கு அமெரிக்கா தான் முதல் முக்கியம், மற்றதெல்லாம் அப்புறம் தான் என்று டிரம்ப் அறிவித்தார்.
மேலும், அவர் பதவியேற்ற உடனடியாக வெள்ளை மாளிகையின்  அகப்பக்கத்தில் இருந்த ஒபாமாவின் கொள்கைத் திட்டங்கள் அனைத்தையும் மாற்றி விட்டு டிரம்ப்பின் திட்டங்கள் பற்றிய தகவல்கள் பதிவேற்றப்பட்டது.
அதோடு 'தேசப்பற்று தினம்' என்றொரு நாளைக் கடைபிடிக்கும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார். 
'அமெரிக்காதான் எனக்கு முதல் முக்கியம். அதற்கு மிகச் சாதாரணமாக இரு வழிமுறைகள் உள்ளன. அதாவது அமெரிக்கப் பொருள்களை வாங்குங்கள், அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்' என்பதே அந்த இருவழிகளாகும்.
இதனிடையே, மாதர்கள் தொடர்பான அதிபர் டிரம்பின் கொள்கைகளை எதிர்த்து 2 லட்சம் பெண்கள் மாபெரும் எதிர்ப்புப் பேரணியை நடத்தினர். இதேபோன்ற டிரம்ப் எதிர்ப்பு மகளிர் பேரணிகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் நடந்தது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-