பாலமுனை சஜா
ஆளுமையான மனிதர்களால்தான் சமூக மாற்றத்தையும் சமூக விடுதலையையும் தான் சார்ந்த சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்க முடியுமே தவிர வேறு ஒன்றுமேயல்ல
அந்த வகையில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை அஷ்ரப் எனும் ஆளுமைமிக்க சிந்தனைவாதியால் உறுவாக்கப்பட்டதன் காரணமாகத்தான் இன்று வரைக்கும் அவ் இயக்கம் சமூதாய மாற்றங்களை நோக்கி பயனித்துக் கொண்டிருக்கின்றது.
தலைவர்களை வெறும் போத்தல்களில் அடைத்து விடலாம் என சில நபர்கள் நினைத்து அதை செய்தும் பார்க்கின்றனர் அது மண்ணைப் பிளக்கும் மரம் போன்றது என்பதைக் கூட அறிய முடியாதவா்களாகவே கடைசி வரை இருந்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரைக்கும் திறமைகளை விட துரோகங்களால் முன்னுக்கு வந்தவர்கள் அதிகமாக காணப்பட்டாலும் அவர்கள் காளான் போன்று காலத்தை இழக்கின்றனர்.
அட்டாளைச்சேனையின் முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் ஆளுமைமிக்க இளைஞன் பாலமுனை சிறிய கிராமத்தின் தலைவன் இவனை வீழ்த்துவதன் மூலம் பெரிய இலக்கை அடைய முடியலாம் என பல பேர் பல கணக்குகள்.
உண்மைக்காக யாரிடமும் முரண்படும் போராட்ட குணம், இதை அன்ஸிலின் பலவீனம் என்று பலவீனப்பட்டோர் நம்பினர்.இதற்காக பொறாமை,வஞ்சகம்,துரோகங்களை ஆயூதமாக பயன்படுத்தினர்.இதில் வெற்றியடைந்ததாகவும் அறிவித்தும் விட்டு நிம்மதியாக நெஞ்சையும் நிமிர்த்தினர் அடுத்தது நான்தான் என்றனர்.
.
இன்று அன்ஸில் தவிர்க்க முடியாத சொல்லாகி போனதால் சிலர் தங்களது காலங்களை கடக்க கரம் நீட்டப்படுகின்றது
இன்று காளான்கள் சுறுங்கிக் கொண்டிருக்கின்றன