News Update :

Saturday, January 14, 2017

TamilLetter

பள்ளிக்குடியிருப்பில் வாழ்வாதார உதவிகள் மாகாண சபை உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டன















குல்ஸான் எபி

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் நிதியொதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ஏரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புகள் பயனாளிகளுக்கு இன்று (14) வழங்கி வைக்கப்பட்டன.

கவிஞர் ஏ.எல்.கால்தீன் தலைமையில் குடியிருப்பு அல்-பாயிஷா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்பு செயலாளருமான ஏ.எல்.தவம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரிய பயனாளிகளுக்கான பொருட்களை கையளித்தார்.

இதன் போது அரச அதிகாரிகள் உட்பட அதிகமான பொது மக்களும் இதில்  கலந்து    கொண்டனர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-