News Update :

Saturday, January 21, 2017

TamilLetter

கிழக்கு மாகாணத்தின் முக்கிய அதிகாாிகளின் இடமாற்றமும் அரசியலும்




குல்ஸான் எபி

நீண்ட காலமாக ஒரே இடத்தில் கடமையாற்றி வரும்  கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட திணைக்கள ; பணிப்பாளர்கள் மற்றும் மாநகர சபையின் ஆணையாளர்களின் இடமாற்றங்களை கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஒப்புதலுடன் அமுல்படுத்தப்படவுள்ளன.

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர்,கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர்,அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர்,கல்முனை மாநகர சபை ஆணையாளர்,அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஆகிய ஐந்து அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அகமட் தமது பரிந்துரைகளை ; மாகாண பிரதம செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

அதிகாரிகளின் நீண்ட கால சேவையைக் கருத்திற் கொண்டே இந்த ஐந்து அதிகாரிகளுக்கான முன்மொழிவை முதலமைச்சின் செயலகம் மேற்கொண்டுள்ளது.
இடமாற்றப்பட்ட அதிகாரிகளை உரிய ; பணி இடங்களுக்கு நியமிக்கும் அறிவுறுத்தல்கள் மாகாண பிரதம செயலாளரினால் விடுக்கப்பட்டுள்ளது

இடமாற்றத்திற்கான பரிந்துரைகளை மாத்திரமே முதலமைச்சின் அலுவலகம் மேற்கொண்டதே தவிர அவர்களுக்கான மாற்று பணி இடங்களை பிரதம செயலாளர் அலுவலகமே மேற் கொண்டுள்ளது.

இந்த இடமாற்றம் தொடர்பாக முதலமைச்சர் மீதும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மீதும் எதிர்க்கட்சி அரசியல் வாதிகளால் கூறப்படும் பொய்க் குற்றச்சாட்டு எந்த விதத்திலும் நியாயமில்லையென பிரதம செயலாளர் காரியாலயத்தில் தொடர்பு கொண்டு கேட்ட போது; தெரிவித்தனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-