News Update :

Monday, January 16, 2017

TamilLetter

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு புகழாரம்















கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்கள் ஒரு இளைஞனாக இருப்பதனால்தான் அவரால் நடைமுறைச் சாத்தியமான திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிவதோடு விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதிலும்; முனைப்புக்;காட்டி வருகின்றார் என்று அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்திப் தெரித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் பதூர் நகர் பிரதேசத்தில் செயற்படும் விளையாட்டுக் கழக வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பதூர் வித்தியாலயத்தில் இன்று(16) இடம் பெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 

தேசிய மட்டத்தில் பல சாதனைகளைப் புரிந்த அக்கரைப்பற்று மண் கடந்த பல வருடங்கலாக அழிந்த நிலையிலேயே காணப்படுகின்றது. 

விளையாட்டின் முக்கியத்துவத்தை எல்லோராலும் விளங்கிக் கொள்ள முடியாமல் போகின்ற காரணத்தினால்தான் இப்படியான நிலமை தோன்றுகின்றது.  ஆனால் இன்று பல திறமைகளை தன்னகத்தில்  கொண்டுள்ள ஒரு இளைஞனிடம் அரசியல் அதிகாரம் கிடைத்த பிறகுதான் இந்த ஊரில்  இழந்து போன மைதானங்களின் அபிவிருத்தி மற்றும் தேவையான விளையாட்டு உபகரணங்கள் என்பன விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்து வருகின்றது.

எனவே விளையாட்டோடு தொடா்பு இல்லாத   அரசியல் வாதிகளிடம் அதிகாரம் இருக்குமாயின் விளையாட்டுக்குப் பதிலாக போதைவஸ்து மற்றும் வன்முறைகளில் இளைஞர்களின் கவனம் திசைமாறியிருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-