குல்ஸான் எபி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இருக்கும் முனாபீக்குகளை கட்சியை விட்டு துரத்த வேண்டும் இதற்கு ஆதரவாக தங்களது உயிரையே துறக்க தயார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட் தெரிவித்தார்.
சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசீமின் முயற்சியினால் இலங்கையில் முதலாவது தொற்ற நோய் ஆராச்சி நிலையம் நிந்தவுரில் அமைக்கப்படவுள்ளது.இதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (28) ஆரம்பமானது இதல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் கட்சிக்குள் இருந்து கொண்டு பல வருடங்களாக சுகபோகம் அனுபவித்தர்கள் இன்று தனது சுயநலத்துக்காக கட்சியை அழித்துவிட துடிக்கின்றனர்.அதன் ஒர் அங்கமாக பஸீல் ராஜபக்ஷவிடம் பல கோடி ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு அபாண்டமான புத்தகங்களை வெளியிடுகின்றனர்.இப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விடயம் உண்மையாக இருந்தால் ஏன் இந்த புத்தகத்தை வெளியிட்டவரின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது.
எனவே என்னதான் இப்படியான குற்றச் சாட்டுக்களை எங்கள் மீது திணித்தாலும் மக்கள் ஒரு போதும் அவர்களை நம்பப் போவதில்லை
ஆகவே கட்சியை பிளவுபடுத்த கங்கணம் கட்டி அலைந்து திரியும் கட்சியில் உள்ள அந்த முனாபிக்குகளை எதிர் வருகின்ற பேராளர் மாநட்டில் வைத்து துரத்த வேண்டும்.அதற்காக நாங்கள் எல்லோரும் தலைவருக்கு பின்னால் அணி திரண்டுள்ளோம் என்றார் முதலமைச்சர் நஸீர் அகமட்