கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய முகவரியில் பார்வையிட முடியும் என அறிவித்துள்ளது.
கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரை நடைபெற்றது. இப் பரீட்சையில் மொத்தமாக 3 இலட்சத்து 15 ஆயிரம் பேர் வரை தோற்றியிருந்தனமை குறிப்பிடத்தக்கது.