அம்பாரை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொத்தானை மரைக்காா் தைக்கா பள்ளிவாசல் தொல்பொருளியல் திணைக்களத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதனால் முஸ்லிம்களின் ஆத்மீக கடமைக்ளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அமைச்சா் ரவுப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இன்று சனிக்கிழைமை குறிப்பிட்ட இடத்திற்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களோடு கலந்துரையாடலை மேற்கொண்டாா்.
மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சா் ரவுப் ஹக்கீம் தமிழ் லெட்டா் செய்திச் சேவைக்கு தனது கருத்துக்களை தெரிவித்தாா்.
பல நூற்றாண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்த பள்ளிவாசலில் ஆண்டாண்டு காலமாக சமயக் கடமைகளை நாடுபுராவுமுள்ள முஸ்லிம்கள் கலந்துகொண்டு நிறைவேற்றி வந்துள்ளனர்.அதற்கான வரலாற்று ஆவணங்களும் எங்களிடம் உள்ளது.அப்படி இருக்கும் சந்தா்ப்பத்தில் . தொல்பொருளியல் திணைக்களம் யாரும் உட்பிரவேசிக்கக்கூடாது என்ற வகையில் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
தொல்பொருளியல் திணைக்களத்தின் இந்த செயற்பாட்டினால் முஸ்லிம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். தைக்காவை பாதுகாப்பதாக இங்கு கூறப்பட்டாலும் , இங்கு நடைபெறுகின்ற மத அனுஷ்டான நிகழ்வுகளுக்கு எந்தவகையிலும் குந்தகம் விளைவிக்கக்கூடாது. இது முஸ்லிம்களின் பூர்வீக இடம் என்பதற்கான ஆதாரங்களை ஒன்றுதிரட்டி, தொல்பொருளியல் திணைக்களத்திடம் சமர்ப்பித்து சட்டரீதியில் இதற்கு தீர்வுகாண்போம்.
அத்துடன், வருடாவருடம் நடைபெற்றுவரும் ராத்திப் மஜ்லிஸும் கந்தூரி நிகழ்வும் இன்னும் ஓரிரு வாரங்களில் இங்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகளுக்கு எவ்விதத்திலும் இடையூறுகள் ஏற்படாதவாறு நாங்கள் தொல்பொருளியல் திணைக்களத்துடன் பேசி தீர்வுகளை பெற்றுத்தருவோம்.என உறுதியளித்தார்.